ADDED : பிப் 24, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை மற்றும் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் வம்புப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, 'தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் காசநோய் விழிப்புணர்வு மூலம் 87 பேருக்கு இலவச மார்பக எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டு, 10 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.
பின், தேவையானவர்களுக்கு வேண்டிய மருந்துகள் வழங்கப்பட்டன. வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். புதுச்சேரியில் உள்ள ராமகிருஷ்ண மடம் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் கிளை மடம் ஆகும்.