/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 28, 2024 04:25 AM

புதுச்சேரி, : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சிவராம் ஆல்வா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பளர்களாக தொகுப்பாளார் கீர்த்தி சாந்தனு, திரைப்பட நடிகர் சாந்தனு பாக்யராஜ், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் பங்கேற்றனர்.
கல்லுாரி பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், முனைவர் சிந்து, முகமது சுஹைல், கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெடில்டா ஆகியோர் நோக்கவுரையாற்றினர். மாணவர்கள், ஆசிரி யர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது. தொடர்ந்து கல்லுாரியில் 15 ஆண் டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில்சிறப்பு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழா ஒருங்கிணைப்பினை அறிவியல் மற்றும் மனிதநேய துறை பேராசிரியர் தினேஷ், மின்னியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை பேராசிரியர் மார்கரெட் செய்திருந்தனர்.

