/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவராம்ஜி யோகா, சமர்ப்பணம் மையம் யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு
/
சிவராம்ஜி யோகா, சமர்ப்பணம் மையம் யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு
சிவராம்ஜி யோகா, சமர்ப்பணம் மையம் யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு
சிவராம்ஜி யோகா, சமர்ப்பணம் மையம் யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மே 12, 2024 04:55 AM

புதுச்சேரி: சிவராம்ஜி யோகா மையம், சமர்ப்பணம் சேவை மையம் சார்பில், 3ம் ஆண்டு யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
கோடை விடுமுறை நாட்களில் மொபைல்போனில் மூழ்கி கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கு, யோகா பண்புகள் கற்று தரும் பணியை சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளாக செய்து வருகிறது.
இச்சேவையின் மூன்றாம் ஆண்டு, இரு பாலருக்கான யோகா பண்பு பயிற்சி முகாம், கடந்த 5ம் தேதி, இ.சி.ஆர்,, லாஸ்பேட்டை, சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. முகாமில், 8 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமியர் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 9:30 மணி முதல் மாலை வரை, யோகாசனம், பிராணயாமம் பயிற்சி, பாரம்பரிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகள், புராண மற்றும் தேசபக்தி கதைகள், தேச தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, ஓவியம், பெயிண்டிங், கராத்தே, வில்கலை பயிற்சி, தற்காப்பு பயிற்சிகள், தேசபக்தி மற்றும் பக்தி பாடல்கள், வினாடி வினாபோட்டி நடத்தப்பட்டது.
யோகா பண்பு பயிற்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. சிவராம்ஜி யோகா மைய தலைவர் பால்ராஜா வரவேற்றார். வியாசா எஜூகேஷன் டெக் உரிமையாளர் அஸ்வத்தாமன் தொகுப்புரை வழங்கினார்.
சிவராம்ஜி யோகா மைய பொதுச்செயலாளர் சிற்றரசு நோக்க உரை நிகழ்த்தினார்.
இந்து முன்னணி தமிழ்நாடு மாநில அமைப்பாளர் பக்தன்ஜி, இந்து முன்னணி புதுச்சேரி மாநில அமைப்பாளர் சணில்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
நிகழ்ச்சியில், நடன ஆசிரியர் அமுதா, யோகா ஆசிரியர்கள் தமிழ், சதா கண்ணன், ஜிடுகாய் கராத்தே சத்யா, வில்வித்தை பயிற்சியாளர் சரவணன், கதை சொல்லி கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர் ஞானகுரு, டாக்டர்கள் ஜாய், குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவராம்ஜி யோகா மையம் பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.