/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாக்சிங் மேற்பார்வையாளருக்கு சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்து
/
பாக்சிங் மேற்பார்வையாளருக்கு சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்து
பாக்சிங் மேற்பார்வையாளருக்கு சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்து
பாக்சிங் மேற்பார்வையாளருக்கு சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்து
ADDED : ஜூலை 22, 2024 01:46 AM

புதுச்சேரி : ஒலிம்பிக் போட்டியில் பாக்சிங் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் பொது செயலாளர் கோபுவிற்கு புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் பொது செயலாளர் கோபு, பாக்சிங் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழா வான ஒலிம்பிக் போட்டி வரும் 26ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 196 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,672 வீரர்கள், 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
பாக்சிங் போட்டியில் இந்திய அணி பங்கேற்கின்ற சூழ்நிலையில் புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் பொது செயலாளர் கோபு, மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணியின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, பாக்சிங் கூட்டமைப்பிற்கு அறிக்கை தாக்கல் செய்வார்.
அவருக்கு புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.