தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்லிங் நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே முன்பணம் அட்டை அறிமுக விழா

ஸ்லிங் நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே முன்பணம் அட்டை அறிமுக விழா

ஸ்லிங் நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே முன்பணம் அட்டை அறிமுக விழா


ADDED : ஜூலை 29, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி கல்லுாரி) ஸ்லிங்நியோ பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான ஸ்லிங்நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே ப்ரீபெயட் கார்டு அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, கல்வியில் டிஜிட்டல் மாற்றம், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து பேசினார்.

செயலாளர் நாராயணசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கினர்.

சிறப்பு விருந்தினராக அடல் இன்கியுபேஷன் மையத்தின் புதுச்சேரி தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வர்தன், டிஜிட்டல் நிதி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.

பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் சிந்தா ரவி பிரசாந்த், ஸ்லிங்நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே ப்ரீபெய்ட் கார்டு இன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் அனிதா வட்டி, ஸ்லிங்நியோ தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களின் ஸ்மார்ட் கேம்பஸ் பேமண்ட் சிஸ்டம் -இன் நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.

இந்த ஸ்மார்ட் அட்டையின் மூலம் மாணவர்கள் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கவும், வணிக வளாகங்கள் மற்றும் விற்பனை முனைய இயந்திரங்களில் பணம் செலுத்தவும், இணையவழி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும், வருகைப் பதிவை கண்காணிக்கவும், கல்லுாரி வளாக நுழைவு வசதியை பெறவும், கல்லுாரிக் கட்டணங்களை செலுத்தவும், கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ஸ்லிங்நியோ செயலியின் மூலம் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் முடியும். இந்த அட்டை மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குவதோடு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் பெற முடியும்.

தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us