/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.620 கோடிக்கு சுருங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
/
ரூ.620 கோடிக்கு சுருங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
ரூ.620 கோடிக்கு சுருங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
ரூ.620 கோடிக்கு சுருங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
ADDED : ஏப் 25, 2024 03:32 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக, திட்ட மதிப்பீடு, ரூ.620 கோடியாக சுருங்கி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த, 2017,ல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, 1,468 ஏக்கரில், ரூ.1828 கோடியில், பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தடையில்லா மின்சாரம், கழிவுநீர், பாதாள சாக்கடை, குப்பையில்லா நகர், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
, புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய மார்க்கெட், சிறை வளாக பார்க்கிங் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அரசு அதனை கைவிட்டது.
அதன் பிறகு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசு ரூ.1048 கோடி மதிப்பில்,பணிகளை அனுப்பியது. ஆனால், ரூ.930 கோடிக்குள் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. அதற்கான பணிகளும் மந்த கதியில் நடந்து வருகின்றன. தற்போது வரும், ஜூன் மாதத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கான காலக்கெடு முடிவடைகிறது.
அதனால், எதிர்ப்பு கிளம்பிய திட்டங்களை தவிர்த்து, மீதம் ரூ.620 கோடி மதிப்பிலான திட்டங்களை மட்டும், அரசு இறுதி செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது.

