/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புது பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி விறு விறு; அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

ADDED : செப் 02, 2024 07:05 AM

புதுச்சேரி : புது பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.
புதுச்சேரி பஸ் நிலையம் ஏ.எப்.டி., திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ஏ.எப்.டி., நிலையத்தில் செம்மண் புழுதி பறக்கின்றது.
அப்பகுதி முழுவதும் புழுதி பறந்து வீடுகளையும் சூழ்கிறது. கடைகளிலும் புழுதி படிகிறது.மழை பெய்தாலும், புது பஸ் நிலையம் முழு சகதி யாக மாறிவிடுகின்றது. பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏ.எப்.டி., திடலில் சகதியாகவும், குண்டு குழியுமாக காட்சி யளிக்கும் இடங்களில் சீரமைப்பு பணிகளை புதுச்சேரி நகராட்சி துவக்கியுள்ளது. இதற்கிடையில், புது பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பஸ்களுக்கான தரைகள் அமைக்கப்பட்டது.
இது குறித்து புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, புது பஸ்டாண்ட்டில் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடித்து, மீண்டும் புது பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதுவரை தற்காலிக ஏற்பாடாக ஏ.எப்.டி., திடலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றனர்.