sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் அதிகரிக்கும் 'ஸ்மோக் பிஸ்கெட்' களமிறங்குமா உணவு பாதுகாப்பு துறை

/

புதுச்சேரியில் அதிகரிக்கும் 'ஸ்மோக் பிஸ்கெட்' களமிறங்குமா உணவு பாதுகாப்பு துறை

புதுச்சேரியில் அதிகரிக்கும் 'ஸ்மோக் பிஸ்கெட்' களமிறங்குமா உணவு பாதுகாப்பு துறை

புதுச்சேரியில் அதிகரிக்கும் 'ஸ்மோக் பிஸ்கெட்' களமிறங்குமா உணவு பாதுகாப்பு துறை


ADDED : ஏப் 28, 2024 03:37 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் அதிகரித்து வரும் ஸ்மோக் பிஸ்கெட்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து, எச்சரிக்கை செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் 'ஸ்மோக் பிஸ்கெட்' சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதையடுத்து, 'ஸ்மோக் பிஸ்கெட்' குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்; அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படைகளை களம் இறக்கியுள்ளது.

புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

இதுகுறித்து, நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறும்போது, 'திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக கவர்னர் நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us