/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.எம்.வி. பள்ளியில் ஆடை அலங்கார போட்டி
/
எஸ்.எம்.வி. பள்ளியில் ஆடை அலங்கார போட்டி
ADDED : ஆக 16, 2024 05:48 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் ஓர் அங்கமான மதகடிப்பட்டு எஸ்.எம்.வி., பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் அனிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தக் ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், முன் மழலையர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேதாஜி, மகாத்மா காந்தி, கொடிகாத்த குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் வேடம் அணிந்தும், சுவாமி விவேகானந்தர், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார், அப்துல்கலாம், ராணுவ வீரர் வேடம் அணிந்து வந்தனர்.
தொடர்ந்து விவசாயி, மருத்துவர், காவலர், ரத்ததானம், கண் தானம், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு அலங்கார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடை ஆலங்கார போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், துணை முதல்வர், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.