/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழை காரணமாக வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள்
/
மழை காரணமாக வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள்
ADDED : செப் 08, 2024 05:48 AM

மழை காரணமாக வீடுகளில் நச்சு பாம்புகள் புகுந்து விடுவது அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் அடிக்கடி இரவில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் வீடுகளில் பாம்புகள் புகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக வீடுகளில் புகும் நச்சுபாம்புகள் அடிக்கடி சிக்கி வருகின்றன.
வனத் துறை ஊழியர்கள் அவற்றை பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டு வருகின்றனர்.
வனத் துறை ஊழியர் கண்ணதாசன் கூறுகையில், 'மழையின்போது மண் பகுதி ஈரமாவதால், மண்ணில் இருக்கும் பாம்புகள் போன்ற ஊர்வனங்கள் கதகதப்பு தேடி வீடுகளில் புகுந்து விடுகின்றன.
வீட்டில் இருப்பவர்கள் திடீரென பாம்பை கண்டதும், பதட்டம் அடைகின்றனர். அதுபோன்ற சமயத்தில் நிதானமாக இருக்க வேண்டும். அப்படி பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் அந்த சூழ்நிலையில் உடனே என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.
வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டால் பொதுமக்கள் அதனை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். பாம்புகள் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும்.
உடனடியாக 94422-88087 என்ற மொபைல் எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றி பிளீச்சிங்பவுடர் போடுவதன் மூலம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தை தடுக்க முடியும். அதேபோல, வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாய்களில் வலை போட வேண்டும்.
வீட்டின் சுற்றுப்பகுதிகளில் தேவையில்லாத பொருட்களை போட்டு வைக்கக் கூடாது. இரவில் வீட்டைச் சுற்றி ஒளி விளக்குகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.