ADDED : மார் 23, 2024 11:30 PM

புதுச்சேரி: அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
புதுச்சேரி பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணியில் பா.ஜ., சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வேட்பாளர் என அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியானது.இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திலாஸ்பேட்டையில் உள்ள அப்பாபைத்தியம் சாமி கோவிலுக்கு சென்றார்.
அங்கு, முதல்வர் ரங்கசாமி, அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு கருவறையில் இருந்து வெளியே வந்தார். வாசலில் நின்றிருந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
முதல்வர் ரங்கசாமி தனது மருமகனானஅமைச்சர் நமச்சிவாயத்திற்கு பூக்கள் துாவி, விபூதி பூசி ஆசீர்வதித்தார்.
மேலும், அப்பா பைத்தியம் சுவாமியிடம் தான் பூஜித்த எலுமிச்சை பழங்கள், விபூதி பிரசாதத்தை வழங்கி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

