ADDED : மார் 02, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மகன் கண்டிப்பால் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அடுத்த சூரமங்கலம் ஏரிக்கரை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 65. வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டின் உள்ளேயே இயற்கை உபாதை கழித்தார். இதனை மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆறுமுகம், வீட்டு அருகே உள்ள வயல்வெளியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.