/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்மண்டல கேலோ இந்தியா பெண்கள் யோகாசன போட்டி சித்தர் பூமி யோகா விளையாட்டு சங்க அணி வெற்றி

ADDED : செப் 09, 2024 05:10 AM

புதுச்சேரி: அஸ்மிதா தென்மண்டல கேலோ இந்தியா பெண்களுக்கான யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க அணியை முதல்வர் பாராட்டினர்.
நாமக்கல் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில், தென் மண்டல கேலோ இந்திய பெண்களுக்கான யோசான போட்டி நடந்தது.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, அந்தமான், நிகோபார் மாநில போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் ஆனந்தபாலயோகி பவனானி ஆசியுடன் 30 மாணவிகள் பங்கேற்றனர்.தென் மண்டல கேலோ இந்தியா பெண்கள் லெட்ஜ் போட்டியில் புதுச்சேரி அணி 2ம் இடம் பிடித்து கோப்பையை வென்றது. 18 வயதினர் ஆர்டிஸ்ட் தனிப்பிரிவில் ஜனனி, ஜோடி பிரிவில் சஸ்மிதா, லீனாஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
குழு பிரிவில் சஸ்மிதா, லீனாஸ்ரீ, கோஜனா, ஜனனி, அன்பரசி 4வது இடம் பிடித்தனர். 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில், ஜோடியாக களம் இறங்கிய ரேவதிஸ்ரீ, விஷ்ணுமகாலட்சுமி தங்கம் வென்றனர்.
கிருத்திகா, ஜெகதீஸ்வரி வெள்ளி பதக்கம், சவீதா, ஸ்வேதா வெண்கலம் வென்றனர். குழு பிரிவில் ஜெகதீஸ்வரி, ரேவதிஸ்ரீ, கிருத்திகா, ஸ்வேதா, சவீதா வெள்ளி பதக்கம் வென்றனர். தொழில்நுட்ப அலுவலர்களாக தயாநிதி, ரீனா ஜோசப், ஸ்வருப் ரமணன், புவனேஸ்வரி கலந்து கொண்டனர். அணி மேலாளராக சண்முககுமார், அணி பயிற்சியாளர்கள் சாருலதா, செல்வரசி கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க அணி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.