தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரும் 24ம் தேதி பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அன்பழகன் ‘தகவல்’

வரும் 24ம் தேதி பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அன்பழகன் ‘தகவல்’

வரும் 24ம் தேதி பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அன்பழகன் ‘தகவல்’


ADDED : ஆக 07, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்ட தொடர் வரும் 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்கவுள்ளதாக, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர், கூறியதாவது;

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்ட தொடர் கடந்த மே 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக தேர்வான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்த பின், சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டப்பேரவை கூட்ட தொடர் வரும் 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கூட்டப்படுகிறது. அன்று, கவர்னர் உரையாற்றுகிறார். பின், மாலை 3:00 மணிக்கு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் 2026–27 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார். இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம், எத்தனை நாள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us