/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் புத்தகம் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் புத்தகம் வழங்கல்
ADDED : ஜூன் 13, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீறுடைகளை சபாநாயர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அதையடுத்து, மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளிக்கு நேற்று காலை மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்களை சபாநாயகர் செல்வம் வரவேற்று, இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளியில் பயிலும், 102 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், பாட புத்தகங்கள் வழங்கினார்.