/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம் சபாநாயகர் செல்வம் உத்தரவு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம் சபாநாயகர் செல்வம் உத்தரவு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம் சபாநாயகர் செல்வம் உத்தரவு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி நிறுத்தம் சபாநாயகர் செல்வம் உத்தரவு
ADDED : ஆக 08, 2024 11:01 PM
புதுச்சேரி: காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி உடனடியாக நிறுத்த சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நாஜிம் பேசியதாவது;
மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லாத சூழலை மாற்ற வேண்டும். முதல்வர் ரங்கசாமி ஆளும்போது மாநில அந்தஸ்து கிடைத்தது என்ற வரலாறு எழுதப்பட வேண்டும். அவரது கோரிக்கைப்படி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இண்டியா கூட்டணி குரல் ஒலிக்க கேட்போம். சபாநாயகர் மத்திய அரசிடம் பேசி, மாநில கடனை தள்ளுபடி செய்யலாம்.
புதிய யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு இல்லை. ரூ. 2 ஆயிரம் கோடி வரை சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி கமிஷன் தலைவரை சந்தித்து புதுச்சேரிக்கு கூடுதல் நிதி பெறுங்கள்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடம், அரசுக்கு ஒதுக்கீடு தி.மு.க., காலத்தில் கொண்டு வரப்பட்டது. இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கும் சென்டர் ஸ்பான்சர் ஸ்கீம் ரூ. 500 கோடி முழுமையாக செலவிடாததால், இந்தமுறை குறைத்து கொடுத்துள்ளனர். தற்போது கடன் வாங்கி செலவிட போகிறோம். அதை சரியாக செய்கிறோமோ என பார்க்க வேண்டும்.
காரைக்காலில் மக்களுக்கு பாதிப்பு தர கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். தற்போதைக்கு கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்படுகிறது.