/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓணம் பண்டிகையொட்டி மாகிக்கு சிறப்பு பஸ்
/
ஓணம் பண்டிகையொட்டி மாகிக்கு சிறப்பு பஸ்
ADDED : செப் 07, 2024 07:01 AM
புதுச்சேரி : ஓணம் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் இருந்து மாகிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
மாகிக்கு, ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரியில் இருந்து வரும் 13ம் தேதி சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ் வரும், 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து மாகிக்கு விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கு பயணம் செய்ய கட்டணமாக, முன்பதிவு கட்டணத்துடன் ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் 'பஸ் இண்டியா ஆப்' மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.