தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.கே.ஒய்.சி., சிறப்பு முகாம்  துவக்கம்

இ.கே.ஒய்.சி., சிறப்பு முகாம்  துவக்கம்

இ.கே.ஒய்.சி., சிறப்பு முகாம்  துவக்கம்


UPDATED : செப் 27, 2026 09:51 PM

ADDED : செப் 27, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 09:51 PM ADDED : செப் 27, 2026 09:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், இ.கே.ஒய்.சி., சிறப்பு முகாம் தொகுதி வாரியாக இன்று துவங்குகிறது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு:

ரேஷன் அட்டைதாரர்களின் வசதிக்காக இன்று முதல் 30ம் தேதி வரை இ.கே.ஒய்.சி., பதிவு செய்யும் முகாம்களில், ரேஷன் அட்டையில் ஆதார் எண், மொபைல் எண் இணைத்தல், முதியோர் மற்றும் நேரில் ரேஷன் கடைக்கு வர இயலாத பயனாளிகளுக்கான பிரதிநிதியை நியமிக்கும் வசதி, இதர சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இம்முகாம் இன்று பாகூர் தொகுதி, பாகூர் அரசு நடுநிலைப் பள்ளி, மணவெளி தொகுதி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கலம் தொகுதி மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை தொகுதி, லாஸ்பேட் நவாலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட் தொகுதி முத்தியால்பேட் வாசவி சர்வதேச சி.பி.எஸ்.இ., பள்ளி, உருளையான்பேட் தொகுதி திருவள்ளூவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகர் தொகுதி முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

நாளை 29ம் தேதி, ஏம்பலம் தொகுதி, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம் தொகுதி காக்காயந்தோப்பு அரசு தொடக்கப் பள்ளி, வில்லியனுார் தொகுதி வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, காமராஜ் நகர் தொகுதி சாரம் எஸ்.ஆர். சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளி, ராஜ்பவன் தொகுதி ராஜ்பவன் வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி, கதிர்காமம் தொகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, காலாப்பட்டு தொகுதி காலப்பட்டு எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

வரும் 30ம் தேதி நெட்டப்பாக்கம் தொகுதி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, உப்பளம் தொகுதி உப்பளம் இம்மாகுலேட் ஹார்ட் ஆப் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் தீப ஒளி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி, முதலியார்பேட்டை தொகுதி முதலியார்பேட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, உழவர்கரை தொகுதி மேரி உழவர்கரை வ.சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளி, திருபுவனை தொகுதி, கலித்தீர்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி, நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் முகாம்கள் நடக்கிறது. இம்முகாம்களில் அந்தந்த தொகுதி மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us