தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாகி, கேரளாவுக்கு விமான சேவை கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

மாகி, கேரளாவுக்கு விமான சேவை கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

மாகி, கேரளாவுக்கு விமான சேவை கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்


ADDED : செப் 27, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 09:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியை மாகி மற்றும் கேரள பகுதிகளோடு இணைக்கும் விமான சேவையும் பரிசீலனையில் இருக்கிறது என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில், ஓணம் குடும்ப சவுஹரித மேளா, புனித அந்தோனியார் மஹாலில் நேற்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில், மாகி எம்.எல்.ஏ., அசோக்குமார், கேரள சமாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுச்சேரி கேரள சமாஜத்தின் ஆண்டு மலரை கவர்னர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், கவர்னர்  கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரி கேரள சமாஜம்- மதம், சாதி, அரசியல் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டுகிறேன். இது போன்ற நிகழ்ச்சிகள் நம்மிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துகிறது. மகிழ்ச்சி நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை நம்மிடையே நிலைத்திருக்க செய்கிறது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும். இந்த புதிய திட்டத்தின் பலன் அனைவரையும் சென்றடையும் விதமாக பதிவு நடைமுறைகளை கேரள சமாஜம் முன்னெடுக்க வேண்டும்.

 புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் ஒரு ரயில் முனையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யவும் ரயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரியை மாகி மற்றும் கேரள பகுதிகளோடு இணைக்கும் விமான சேவையும் பரிசீலனையில் இருக்கிறது. உடான் விமான சேவை திட்டத்தின் கீழ் கண்ணுார், கோழிக்கோடு, மற்றும் கொச்சிக்கு விமான சேவை திட்டமிடப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதை 2,500 மீட்டராக அதிகரிக்கப்படும். அதன் மூலமாக பெரிய அளவிலான சர்வதேச விமான சேவை தொடங்கப்படும். இந்த சேவைகள் புதுச்சேரியை கேரளத்துடன் இணைத்து பயனளிக்கும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us