தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்கம்பம் சாய்ந்து சிறுவன் பலி புதுச்சேரியில் சோகம்

மின்கம்பம் சாய்ந்து சிறுவன் பலி புதுச்சேரியில் சோகம்

மின்கம்பம் சாய்ந்து சிறுவன் பலி புதுச்சேரியில் சோகம்


ADDED : செப் 27, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துருபிடித்த மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கடற்கரை அழகை ரசிக்க நாட்டின் பல பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். புதுச்சேரி மக்களும் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் குவிந்து விடுகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் குவியும் கடற்கரையில் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

உடைந்து கிடக்கும் இருக்கைகள், மின் கம்பங்களில் கேபிள்கள் ஆபத்தான முறையில் கேபிள்கள் நீட்டிக் கொண்டு இருப்பதும், துரு பிடித்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை பத்திரிக்கைகள் சுட்டி காட்டியும், அரசு கும்ப கர்ணன் துாக்கத்தில் இருந்து இதுவரை எழவில்லை.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தஸ்லீம், ரிகானா தம்பதியினர், வம்பாக்கீரப்பாளையத்தில் தங்கி புதுச்சேரி கடற்கரையில் மின்மினி விளக்குகள், பொம்மைகள் விற்று வருகின்றனர்.

நேற்று மாலை ரிகானா தனது 5 வயது குழந்தை பைசலுடன், அஜெந்தா ஓட்டல் அருகே கடற்கரையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பைசல் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, துருப்பிடித்த மின் கம்பம் ஒன்று, குழந்தை பைசல் மார்பு மீது திடீரென விழுந்தது. துடிதுடித்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதனால் கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் நெஞ்சில் மின் கம்பம் விழுந்ததால், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிழைப்புக்காக புதுச்சேரி வந்து, அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால், மின் கம்பம் முறிந்து விழுந்து குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே, சுற்றுலா வளர்ச்சி பெறும். மீண்டும் மீண்டும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவர். இதுபோன்று துருபிடித்த மின் கம்பங்கள், உடைந்து கிடக்கும் பொருட்களால் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கினால், சுற்றுலா பயணிகள் வருவது முற்றிலும் தடைப்படும்.

ஆயிரக்கணக்கான மக்கள் வரும் கடற்கரையில் பாதுகாப்பற்ற துருபிடித்த மின் கம்பம் முறிந்து விழுந்து 5 வயது குழந்தை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பாக்ஸ்.,

10 நாட்களுக்கு முன்

கடற்கரை சாலையில் உள்ள மின்கம்பங்கள் துருபிடித்து எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் இதேபோல் ஒரு துருபிடித்த மின்கம்பம் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us