/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதி, குடியிருப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்
/
சாதி, குடியிருப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : மே 16, 2024 03:04 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான மூன்றாம் நாள் முகாமில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் வசிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், தங்கள் மேற்படிப்பை தொடர, சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான, சிறப்பு முகாம்கள், மூன்று நாட்களாக நடந்து வருகின்றன.
தாலுகா அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், உரிய நேரத்தில் சிரமம் இன்றி, சான்றிதழ்களை பெறவும், இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம், அரியாங்குப்பம் - இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; அரும்பார்த்தபுரம் - திரு.வி.க., அரசு உயர்நிலைப்பள்ளி; மடுகரை - வெங்கட சுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், முகாம்கள் நடந்தன.
மாணவர்கள் ஆர்வமுடன், கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாம்கள், ஒரு மாதத்திற்கு நடக்க உள்ளன. இதை மாணவர்களும், பெற்றோர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.