/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேச்சு

ADDED : மார் 15, 2025 06:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., பேசினார்.
ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேசியது:
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் பல சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன. இந்த கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளில் பாடங்கள் டிஜிட்டல் முறையிலும் வழங்கப்படுவது போன்ற முக்கியமான வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கொள்கையில் தான் இதற்கு முந்தைய கல்விக் கொள்கையில் இல்லாத வகையில் தாய் மொழியில் கல்வியை கற்பதற்காக வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.எஸ்.இ., திட்டம் அறிமுகப்படுத்திவிட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கையின்படி தமிழ் வழி கல்வி செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே நிதிச்சுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி மாநிலம் இதற்கான கணிசமான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் வெற்றிகரமாக அமலாக்க பள்ளியின் உள் கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவைப்படும் சிறப்பு நிதியை ஓதுக்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.