/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
ADDED : ஆக 09, 2024 04:44 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வெள்ளி விழா ஆண்டையொட்டி, அதன் உறுப்புக் கல்லுாரியான சட்டக் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
விழாவில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் ஆதிர்ஷ் அகர்வால், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். வழக்கறிஞர் தொழிலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலின் எதிர்காலம் குறித்தும் விளக்கினார்.
அவர் பேசுகையில், 'மாணவர்கள் சட்டக்கல்லுாரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே தனது எதிர்கால குறிக்கோளை அதாவது சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் அல்லது கீழமை கோர்ட் வக்கீல் என்பதில் ஒன்றை தேர்வு செய்து, அதை அடைய தொடர் முயற்சி செய்ய வேண்டும்' என்றார்.
விழாவில் டில்லி பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் சோழராஜன் உரையாற்றினார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை உரை நிகழ்த்தினார்.
பொருளாளர் ராஜராஜன், செயலாளர் நாராயணசாமி, பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாஜலபதி, சட்டக்கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் ஆகியோர் பங்கேற்றனர்.