/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கும்பாபிேஷகத்திற்கு பிறகே இரும்பை கோவிலில் விசேஷ பூஜை
/
கும்பாபிேஷகத்திற்கு பிறகே இரும்பை கோவிலில் விசேஷ பூஜை
கும்பாபிேஷகத்திற்கு பிறகே இரும்பை கோவிலில் விசேஷ பூஜை
கும்பாபிேஷகத்திற்கு பிறகே இரும்பை கோவிலில் விசேஷ பூஜை
ADDED : மே 21, 2024 04:57 AM
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி கோவிலில் திருப்பணிகள் நடப்பதால், விசேஷ பூஜைகள் கும்பாபிேஷகத்திற்கு பிறகு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த இரும்பையில் பாலா திரிபுரசுந்தரி கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு பவுர்ணமியன்றும் நடக்கும் விசேஷ பூஜைகள் பிரசித்திப் பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
தற்போது, இக்கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், ராஜமாதங்கி அம்மனுக்கு புதிதாக சன்னதி அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
திருப்பணிகள் நடந்து வருவதால், பவுர்ணமி பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் அனைத்தும் கும்பாபிேஷகத்திற்கு பிறகே வழக்கம்போல நடக்கும் என்றும், அதுவரை நித்தியபடி பூஜைகள் தினசரி நடந்து வருவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.