/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
/
பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED : மே 02, 2024 12:35 AM

மயிலம், : மயிலம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.
குரு பகவான் நேற்று மாலை 5:19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் பரிகார ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசியின் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், நிர்வாகி மணிகண்டன், விழா குழுத்தலைவர் ரவி, நிர்மலா ரவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், இணை ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் தினேஷ், அர்ச்சகர்கள் கமலஹாசன், சரவணன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன், ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

