ADDED : ஆக 04, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
