தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை


ADDED : ஜூலை 22, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: புதுச்சேரி அய்யப்பன் கோவிலில் எழுந்தருளி உள்ள பகவதி அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாரதிபுரம் அய்யப்பன் கோவிலில், கடந்த 17ம் தேதி முதல், அடுத்த மாதம் 17ம் தேதி வரை, நாள் தோறும் இரவு 7:00 மணி முதல், 8:00 மணிவரை பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

இந்த பூஜையில், பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க 400 ரூபாய் செலுத்த வேண்டும்.

விழாவில் அடுத்த மாதம் 14ம் தேதியன்று, மாளிகைபுறத்தம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. பொங்கல் வைக்க விரும்பும் பக்தர்கள் ஆலய அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என, அய்யப்பன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us