/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கறவை மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்
/
கறவை மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்
ADDED : ஜூன் 27, 2024 02:51 AM

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் மத்திய அரசின் ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ், கறவை மாடுகளுக்கு சினை பிடிக்கும் முகாம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் நடக்கிறது.
அதன்படி, கரிக்கலாம்பாக்கம் கால்நடை மருந்தகத்தில், சிறப்புமுகாம் நடந்தது. கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர் பிரீத்தா முன்னிலை வகித்தார். மத்திய அரசின் ஆத்மா திட்ட கால்நடை டாக்டர் செல்வமுத்து பங்கேற்றார்.
இதில், 100க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுக்கு மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.
கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, ஏம்பலம், செம்பியபாளையம், நத்தமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கால்நடை விவசாயிகள் மற்றும் ஆத்மா திட்ட கால்நடை குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கால்நடை மருந்தக ஊழியர்கள் செந்தில், காமராஜ், ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் வினோத், சிவானந்த விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.