/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கேட்டிங் மைதானத்தில் பார்வையாளர் கேலரி
/
ஸ்கேட்டிங் மைதானத்தில் பார்வையாளர் கேலரி
ADDED : மே 07, 2024 05:55 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் பார்வையாளர் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையாக, புதுச்சேரியில் சர்வதேச தரத்துடன் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில், 56 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டது.
நீள் வட்ட வடிவில் அமைக்கப்பட்ட, ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தின் நடுவே, ஹாக்கி ஸ்கேட்டிங் மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்கேட்டிங் மைதானத்தில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் காலை,மாலையில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்போது ஸ்கேட்டிங் மைதானத்தில் பார்வையாளர் கேலரி சிமென்ட் கட்டை கொண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கடந்த சில நாட்களுக்காக மணல் சமன்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றனர்.
ஸ்கேட்டிங் வீரர்கள் பயிற்சி ஈடுபட்டாலும்,முன்,பார்வையாளர்கள்,பெற்றோர் அமர்ந்து காணும் வசதி இல்லை.இது பெரும் குறையாவே இருந்து வந்தது.கேலரி மூலம் இனி பார்வையாளர்களும் போட்டியை ரசித்து காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.