/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பு பள்ளியில் விளையாட்டு போட்டி
/
நெல்லித்தோப்பு பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : மார் 06, 2025 03:43 AM

புதுச்சேரி : நெல்லிதோப்பு பெரியார் நகர் காந்தி அரசு நடுநிலை பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
உடற்கல்வி ஆசிரியர் துரை வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜான்சி தலைமை தாங்கினார். கல்வித்துறை துணை இயக்குநர் (பெண்கல்வி) சிவராமரெட்டி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துணை இயக்குநர் வைத்தியநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
ஆசிரியர் அனுசுயா வாழ்த்தி பேசினார். ஆசிரியர் சுமதி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேவிகன்யாகுமரி, சுனிதா, ஹேமாவதி, மேகலா, பிருந்தா, கவுசல்யா, குணசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் அய்யனார் நன்றி கூறினார்.