/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளியில் விளையாட்டு விழா
/
பெத்தி செமினார் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 15, 2024 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் 2024 -25ம் ஆண்டிற்கான விளையாட்டு விழா, உப்பளம் பெத்தி செமினார் துவக்கப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் எஸ்.பி., பாஸ்கரன் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ், அன்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி துணை முதல்வர் சின்னப்பன் நன்றி கூறினார்.