தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு நலச்சங்கம் ஆலோசனை கூட்டம்

விளையாட்டு நலச்சங்கம் ஆலோசனை கூட்டம்

விளையாட்டு நலச்சங்கம் ஆலோசனை கூட்டம்


ADDED : ஏப் 23, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆதரவுடன், முத்தியால்பேட்டை தொகுதி விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சோலை நகர் இளைஞர் விடுதியில் நடந்தது.

தொகுதி தலைவர் தசேந்திரன் தலைமை தாங்கினார். முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் தேவராஜ், ரவி, வீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் கராத்தே வளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பாலு, ராஜ், பிரகதீஸ்வரன், ஆறுமுகம், செந்தில், சதீஷ், வெங்கடாஜலபதி, அழகப்பன், ராஜா, சந்துரு, பிரவீன், அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

முத்தியால்பேட்டை தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்காக இலவச இன்சூரன்ஸ் வசதி, விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான பயணப்படி வசதியை அரசு செய்து தர முன்னுர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அன்பழகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us