/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வீரர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி
/
விளையாட்டு வீரர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி
ADDED : ஆக 08, 2024 12:27 AM

புதுச்சேரி : மத்திய அரசு விளையாட்டு நலத்துறை மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தேக்வோண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா மூலம் நடத்தப்படும் 7 வது கேடட் குறுகி மற்றும் பூம்சே போட்டிகள் ஆந்திரா மாநிலம்,விசாகப்பட்டினம் ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதில் புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில், வித்யாபவன் பள்ளி கோபி ஈஸ்வரன், அமலோற்பவம் பள்ளி பிவஸ்வநாத் பியூரா, வசீகரன், வாசவி பள்ளி நிகில்குமார், சுனில், அஸ்வத், சுசிலாபாய் அரசு பள்ளி ஷிவானி, அமிர்த வித்யாலயா பள்ளி கிரிஷா, அரசு மேல்நிலைப்பள்ளி சியாமளா, காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த ஹர்திக், அசி அஹமத், சாய்ஷிவானி, மாகே பிராந்தியம்வருடுதனஸ்ரீ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தலைமை பயிற்சியாளராக அமைப்புச் செயலாளர் நந்தகுமார், பயிற்சியாளராக ஹரிஹரன், மேலாளராக வாணி, சர்வதேச நடுவராக பகவத்சிங், தேசிய நடுவராக செல்வரசி ஆகியோர் உடன் சென்றனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்த வழி அனுப்பும் நிகழ்ச்சியில், ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் தனசேகர் வாழ்த்தி,விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பினார்.
ஒலிம்பிக் சங்கத்தின் சி.இ.ஓ. முத்துகேசவேலு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அருள்கோஷ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி தேக்வோண்டோ சங்க செயலாளர் மஞ்சுநாதன், நிர்வாகிகள் தக் ஷனபிரியா, சிலம்பரசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.