/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
விளையாட்டு வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 01, 2024 06:33 AM
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கராத்தே ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சதீஷ், தினகர், அய்யனார், பாபு, ரவி, கார்த்திக் முன்னிலை வகித்தனர். தொகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில விளையாட்டு நல சங்கத்தின் தலைவர் கராத்தே வளவன் வாழ்த்தி பேசினார். பிரவீன் குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று தர வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள மைதானங்களை மேம்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.