/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
/
எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 11:47 PM

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே.மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில்10ம் வகுப்பு தேர்வு எழுதிய 44 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி கனிஷ்கா 480 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் தீபக் 477 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் மிதுன்ராஜ் 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
450க்கு மேல் 10 பேர், 400க்கு மேல் 24 பேர், 350க்கு மேல் 35 பேர், 300க்கு மேல் 41 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். பாடவாரியாக 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள், 6 பேர் 99 மதிப்பெண்கள், 2 பேர் 98 மதிப்பெண்கள், 6 பேர் 97 மதிப்பெண் பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் மகேந்திரன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.
அவர், கூறுகையில், 'நமது பள்ளி நகர்புற மேல்நிலைப் பள்ளிக்கு இணையாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகிறது. பள்ளியின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை அட்மிஷன் செய்யப்படும் மாணவர்களுக்கு மூன்று செட் சீருடைகள், இரண்டு செட் ஷூக்கள் மற்றும் 50 சதவீதம் கல்வி கட்டண சலுகை அளிக்கப்படும்' என்றார்.