தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படித்த பள்ளியை மறக்காமல் உதவும் 'எஸ்.ஆர்.எஸ்.,-90' குழு

படித்த பள்ளியை மறக்காமல் உதவும் 'எஸ்.ஆர்.எஸ்.,-90' குழு

படித்த பள்ளியை மறக்காமல் உதவும் 'எஸ்.ஆர்.எஸ்.,-90' குழு


ADDED : மார் 22, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : எஸ்.ஆர்.எஸ். அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு சார்பில், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு தேர்வு எழுதும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சாரம் பகுதியில், எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள், 'எஸ்.ஆர்.எஸ். - 90' என்ற பெயரில் குழு அமைத்து, பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் குழு சார்பில், பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கி வந்தனர். இதன் நிறைவு விழா மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு தேர்வு எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிரேமலதா சாந்தி தலைமை தாங்கினார். பள்ளி முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவ - மாணவிகளுக்கு தேர்வு எழுதும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவ - மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us