ADDED : மே 15, 2024 01:02 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
கிருமாம்பாக்கம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி அஷ்வினி, 491, மதிப்பெண் பெற்று முதல் இடம், ஸ்ரீலேகா 485 மதிப்பெண் பெற்று 2ம் இடம், நித்திஷா 476 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். 84 சதவீதம் மாணவர்கள், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர் பிரதீஷ் 556 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சிவமணி 554 மதிப்பெண் பெற்று 2ம் இடம், ரம்யா 545 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பிடித்தனர். 90 சதவீத மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களை பள்ளியின் தாளாளர் மோகன் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டப்பட்டனர்.

