ADDED : ஜூன் 10, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏம்பலம் அடுத்த கீழ்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் 46, இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அதே பகுதியில் உள்ள ரேனுகை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் 49, என்பவர் என்னை கேட்காமல் கோவிலில் பொங்கல் வைக்க கூடாது என கேட்டார்.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் அங்கு பூஜைக்கு வைத்திருந்த கத்தியால் செல்வத்தை நெற்றியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை தேடி வருகின்றனர்.