/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 7 ம் தேதி ஸ்டாலின் பிரசாரம்
/
புதுச்சேரியில் 7 ம் தேதி ஸ்டாலின் பிரசாரம்
ADDED : ஏப் 02, 2024 03:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் காங்.வேட்பாளரை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்.வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், புதுச்சேரி தொகுதியில், தி.மு.க., போட்டியிட வேண்டும் என, கட்சியினர் சிலர் விருப்பம் தெரிவித்தனர்.
இதையொட்டி, காங்., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் இடையில், அவ்வப்போது உரசல்கள் எழுந்தன. இந்நிலையில் காங்.,க்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு, ஆதரவாக தி.மு.க நிர்வாகிகள் முழு மூச்சுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழக அமைச்சர் உதயநிதி, புதுச்சேரியில் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக, பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்.இது, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வரும், 7ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்கின்றார்.
இதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., மாநில நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

