/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வேட்பாளரை ஆதரித்து நாளை ஸ்டாலின் பிரசாரம்
/
காங்., வேட்பாளரை ஆதரித்து நாளை ஸ்டாலின் பிரசாரம்
ADDED : ஏப் 06, 2024 05:32 AM

புதுச்சேரி: காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார்.
இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில், புதுச்சேரியில் காங்., சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 9:00 மணியளவில் சிங்காரவேலர் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
இதற்கிடையில் பொதுக்கூட்டம் நடக்கும் சிங்காரவேலர் திடலில் நேற்று மாநில அமைப்பாளர் சிவா தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா மேடை அமைப்பது, வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வின்போது எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

