தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில வங்கியாளர்கள் குழும ஆய்வுக்கூட்டம்

மாநில வங்கியாளர்கள் குழும ஆய்வுக்கூட்டம்

மாநில வங்கியாளர்கள் குழும ஆய்வுக்கூட்டம்


ADDED : ஜூன் 16, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் சன்வே  ஓட்டலில் நடந்தது.

ஆய்வுக்கூட்டத்தில், 2026–27ம் ஆண்டிற்கான (ஏ.சி.பி) புத்தகத்தை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிவ் பஜ்ரங் சிங், அரசு நிதித்துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு ஆகியோர் வழங்கினர்.

கூட்டத்தில், நிதிச் சேவைகள் துறை இணை செயலாளர் ஆஷிஷ் மதோராவ் மோரே, ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலக பொது மேலாளர் ராஜ்குமார், நபார்டு வங்கி பொது மேலாளர் ஹரிகிருஷ்ணராஜ், இந்தியன் வங்கி சென்னை கள பொது மேலாளர் பத்மாவதி, பொது மேலாளர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்ரமணியன், முன்னோடி மாவட்ட மேலாளர்கள் சதீஷ் குமார், சித்தார்த்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளடக்கிய  2026 – 27ம் நிதியாண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தின் மொத்த கடன் இலக்கு 17,500 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் தனது சொந்த கட்டடத்தை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிப்பஜ்ரங் சிங், ஊரக வளர்ச்சித் துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us