ADDED : ஜூலை 01, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : புதுச்சேரி, பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடக கலைக்குழு, வீர சிலம்பாட்டம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆகியன சார்பில், மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று துவங்கியது.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த போட்டியை சிறப்பு விருந்தினர்கள் சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன் நிர்வாகிகள் பல்வேறு சிலம்பாட்ட சங்கங்களின் நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.