தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு

மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு

மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு


ADDED : ஜூன் 03, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார், ஜூன் 4–

காமாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில், மாநில அளவில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

வில்லியனுார் காமாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி பெரியபேட் அம்பேத்கர் திடலில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டது.

மூன்று ரவுண்டுகள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் இறுதி போட்டியில் விளையாடியது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று போட்டியில் முதலிடம் பிடித்த பெரியபேட் கபடி கழகம் அணிக்கு ஆறடி உயர சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் வழங்கி பாராட்டினார்.

இரண்டாம் இடத்தை பிடித்த அரியலுார் கபடி அணிக்கு ஐந்து அடி உயர சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் 8 ஆயிரம் ரொக்கம், மூன்றாம் இடத்தை பிடித்த கண்டமங்கலம் அடுத்த மருதுார் கிராம கபடி கழக அணிக்கு நான்கு அடி உயர சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் 6 ஆயிரம் ரொக்கம், மேலும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஆட்டகாரர்களுக்கு பரிசுகளை எம்.எல்.ஏ., வழங்கி பாராட்டினார்.

கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பெரியபேட் கபடி கழக நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us