ADDED : ஜூன் 03, 2026 06:12 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மக்காச்சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி, பெண் உயிரிழந்தார்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கண்ணகி, 45; இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.
நேற்று மக்காச்சோளம் அறுவடை பணி துவங்கியது. அறுவடை செய்த மக்காச்சோள கதிர்களை மூட்டையாக கட்டி கண்ணகி தலையில் சுமந்து சென்று, அறுவடை இயந்திரத்தில் கொட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கிய கண்ணகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த சங்கராரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், கண்ணகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
