/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி
/
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி
ADDED : ஆக 01, 2024 06:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் இருந்து 1,000 மாணவர்கள் பங்கேற்று கிரோகி, பூம்சே ஆகிய பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. செந்தில் கல்வியியல் கல்லுாரி செயலாளர் செந்தில்குமார், பரிசுகளை வழங்கினார்.
மோகித் கட்டுமான நிறுவன உரிமையாளர் ரவிக்குமார், செந்தில் மருத்துவமனை மருத்துவர் மணிகண்டஜோதி, ஒலிம்பிக் விளையாட்டு சங்க துணைத் தலைவர் சங்கர்ராஜ், முன்னாள் கவுன்சிலர் செல்வகணபதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்க செயலாளர் மாஸ்டர் தினேஷ்குமார் முன்னிலையில், சர்வதேச நடுவர்கள் ஜெய்சங்கர், பிரசன்னா செய்திருந்தனர்.