/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சி
/
புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2024 06:47 AM

புதுச்சேரி : புனித வெள்ளியையொட்டி, பெரிய சிலுவை பாதை ஊர்வலத்தில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு சிலுவையில் அறைப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தினத்தையொட்டி, புதுச்சேரியில், உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பாதம் கழுவும் நிகழ்ச்சி மற்றும் ஆராதனை நடந்தது. ஜென்மராக்கினி மாதா, ஆலயத்தில், சிலுவை பாதை தியான ஊர்வலம் நடந்தது. அதில், புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டனர்.
அதே போன்று, துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனுார் லுார்து அன்னை ஆலயம் உள்ளிட்ட பேராலயங்களில், சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தேவாலயங்களில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி, தொடர்ந்து, இயேசு சிலுவை பாடுகளை தியானித்து சிலுவைக்கு முத்தம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து, இயேசு சிலுவையில் அறைப்பட்ட 3ம் நாளில் உயிர்தெழுந்தார். அந்த நாளை நினைவு கூறும் வகையில், நாளை 31ம் தேதி இரவு ஈஸ்டர் பெருவிழாவில், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

