sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை: போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் என கவர்னர் தகவல்

/

மக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை: போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் என கவர்னர் தகவல்

மக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை: போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் என கவர்னர் தகவல்

மக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை: போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் என கவர்னர் தகவல்


ADDED : ஜூன் 18, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.சி.சி., மாணவர்கள் கடற்கரையில் குப்பைகளை அகற்றியதன் மூலம் குப்பை உரிய இடத்தில் போட வேண்டும் என்ற உணர்வு மாணவர் மனதில் ஏற்படும். ஸ்வச் பாரத் என்ற பிரதமரின் மகத்தான திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், கண்ட இடங்களில் குப்பைகளை போடக்கூடாது. புதுச்சேரியில் நீண்ட காலமாக மதுபான கடைகள் இருந்து வருகிறது.

போதை பொருள் விவகாரத்திற்குள் மதுவை கொண்டு வந்தோம் என்றால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை. போதை பொருளை மதுவில் இருந்து தனியாக பிரித்து பார்க்க வேண்டும்.

முதலில் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம். அதேபோல் சாதாரண குடிமக்கள் வாழ்கின்ற பகுதியில் உள்ள மதுபான கடைகளை அகற்றுவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

போதை பொருள் ஒழிப்பில் கடந்த மூன்று மாதங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. எந்த பகுதியில் போதை பொருள் கஞ்சா விற்கப்படுகிறது என தெரிந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். அந்த பகுதி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ள ரெஸ்டோ பார்களை எல்லாம் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் குறித்த கேள்விக்கு, ஒரு இடம் வாடகைக்கு தரப்பட்டுள்ளதாக அறிகிறேன். வாடகைக்கு கொடுத்த பின்பு அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை உரிமையாளர் கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக காவல் துறையினர் இதை கண்டுபிடித்து கைப்பற்றியதற்கு புதுச்சேரி போலீஸ் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. எத்தகைய தவறுகள் நடந்திருந்தாலும், அதனுடைய முழுமையான ஆழத்தை கண்பிடித்து உரியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்டாக் கன்வீனர் நியமனம் குறித்து பல புகார்கள் வந்துள்ளது. அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களில் அது குறித்து முடிவு எடுக்கப்படும்.மின்சார கட்டணம் குறித்து குற்றம் சொல்லும் தி.மு.க. காங்., கட்சியும் தமிழகத்தில் ஆள்கிறார்கள். அங்கு எவ்வளவு கட்டணம், புதுச்சேரியில் எவ்வளவு கட்டணம் என கணக்கிட்டு கூற சொல்லுங்கள்.

தமிழகத்தை விட மின் கட்டணம் அதிகமாக உள்ளது என கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கு தவறு நடந்தாலும் என்னுடைய பார்வைக்கு கொண்டு வாருங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us