/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ், கார்கள் மீது கல்வீசி தாக்குதல் மனநலம் பாதித்தவரால் பரபரப்பு
/
பஸ், கார்கள் மீது கல்வீசி தாக்குதல் மனநலம் பாதித்தவரால் பரபரப்பு
பஸ், கார்கள் மீது கல்வீசி தாக்குதல் மனநலம் பாதித்தவரால் பரபரப்பு
பஸ், கார்கள் மீது கல்வீசி தாக்குதல் மனநலம் பாதித்தவரால் பரபரப்பு
ADDED : மே 20, 2024 05:22 AM

பாகூர் : புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடை சந்திப்பில் நேற்று காலை வாலிபர் ஒருவர் அவ்வழியாக சென்ற பஸ் மற்றும் கார்களின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இதில், தமிழக அரசு ஏ.சி. பஸ் மற்றும் இரண்டு கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறி உள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று சென்ற அவர் மீண்டும் நேற்று சிகிச்சை பெற விருதாச்சலத்தில் இருந்து நடந்தே வந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

