/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்பாக்கம், தேங்காய்த்திட்டில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
/
கொம்பாக்கம், தேங்காய்த்திட்டில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கொம்பாக்கம், தேங்காய்த்திட்டில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கொம்பாக்கம், தேங்காய்த்திட்டில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ADDED : மே 07, 2024 05:26 AM
புதுச்சேரி : குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கழுவும் பணியால் நாளை கொம்பாக்கத்திலும், நாளை மறுநாள் தேங்காய்த்திட்டில் குடிநீர் வினியோகம் கட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி ஒட்டம் பாளையத்தில் உள்ள கொம்பாக்கம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கழுவும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 8ம் தேதி மதியம் 12:00 மணிமுதல் பகல் 2:00 மணி வரை கொம்பாக்கம், கொம்பாக் கம் பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், கர்ம வீரர் காமராஜர் நகர், சிமெண்ட் களம், குப்பம்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபடும்.
முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு கீழ் நிலை மற்றும் மேல் நிலை நீர்தேக்க தொட்டி கழுவும் பணிகள் மேற் கொள்ள இருப்பதால், நாளை மறுநாள் 9ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை, தேங்காய்த்திட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுதும் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.