ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் வடிவுக்கரசி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி சிறப்புரையாற்றினார்.
விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரைப் போட்டி, நடனம், நாடகம், பாடல் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழாசிரியர் ஜார்ஜ் திமான்ஷ் தொகுப்புரையாற்றினார். ஆசிரியை தர்மாம்பாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
